தக்கலை, டிச. 11 –
தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் மகன் ஜெனிஸ் பிரதீப் (27). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இன்று அவரது தாயார் பாத்திமா செல்லம் என்பவர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஜெனிஸ் பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கோயிலுக்கு சென்ற பாத்திமா வீடு திரும்பிய போது வீட்டில் அறையில் ஜெனிஸ் பிரதிப் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை கண்ட தாயார் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து ஜெனிஸ் பிரதீப் உடலை இறக்கினர். பின்னர் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தாயார் பாத்திமா செல்லம் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ஜெனிஸ் பிரதீப் ஒரு பண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் அவரிடம் பேசவில்லை. இதனால் ஜெனிஸ் பிரதீப் சோகமாக இருந்துள்ளதும் தெரியவந்தது. வருத்தத்தில் அவர் தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.



