புதுக்கடை, ஜன. 8 –
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நட்டாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை சைகை காட்டிய போது வாகனம் நிறுத்தாமல் சென்றது.
இதையடுத்து வாகனத்தை துரத்தி சென்று கல்லுக்கூட்டம் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது அதில் சுமார் 1000 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. வாகன ஓட்டுனர் தப்பிவிட்டார். தொடர்ந்து மண்ணெண்ணெய் இனயத்தில் உள்ள குடோனிலும், வாகனம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



