புதுக்கடை, ஜன.15-
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பேரூராட்சி குழுக்கள் சார்ந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பானைகளில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக பேரூராட்சியில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் தகிருஷ்ணன், லாசர், எமல்ஜெபசிங், அல்போன்சாள், அனிதா, சோபா, சுகந்தி, மல்லிகா, தீபா, சமுத்திரபாண்டி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மசூர் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



