கருங்கல், டிச. 4 –
புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (35) டிரைவர் வேலை பார்க்கிறார். இவருக்கும் தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த சுஜின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் ஷாஜி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்று விட்டு புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆபிகோடு என்ற பகுதியில் வரும்போது சுஜின் மற்றும் அவரது நண்பர்கள் அசோக், ரதீஷ்,சுஜித், ரெஜி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து ஷாஜியை வழிமறித்து சரமாரியாக கல்லாலும், கம்பாலும் தாக்கி உள்ளனர். இதில் ஷாஜி படுகாயம் அடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் பிரேஸ்லெட் மற்றும் 5 பவுன் தங்கச் செயின் போன்றவற்றை பறித்து விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷாஜி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜின், அசோக், ரதீஷ், சுஜித், ரெஜி ஆகிய ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


