ஊர் கண்காணிப்பாளர் திட்டத்தில் நான்கு கேமராக்களை கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்
கன்னியாகுமாரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அந்தத் திட்டங்களில் ஊர் காவல் கண்காணிப்பாளர் திட்டம் ஒரு கண்காணிப்பாளர் ஒரு காவலர் 2 கேமராக்கள் என்னும் திட்டம் துவங்கப்பட்டு செயல்பாட்டில் வந்துள்ளது இந்த திட்டமானது நேற்று மாலை சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன் புதூரில் நான்கு கேமராக்கள் பொதுமக்கள் உதவியுடன் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்கள் செயல்பாட்டிற்கு நேற்று கொண்டு வந்து பொதுமக்கள் முன்னிலையில் கேமராக்களை இயக்கி துவக்கி வைத்தார் இதில் பொதுமக்கள் பெருமளவு கலந்து கொண்டனர்