பூதப்பாண்டி, டிசம்பர் 06 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட ஜீவா நகர் மற்றும் பாரதி தெருவில் நேற்று மதியம் 12 மணியளவில் கடைகளுக்கு சென்ற மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட ஆறு நபர்களை அந்த வழியாக வந்த வெள்ளை நிறத்தில் உள்ள நாய் ஆக்ரோசத்துடன் ஒவ்வொருவரையாக கடித்து கொண்டு ஓடியது.
இந்த நபர்களுடைய சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்க்கும் போது அந்த நாய் ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டே இருந்தது. இதையடித்து அந்த ஆறு நபர்களும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இது குறித்து இறச்சகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் கூறும்போது: ஆங்காங்கே பிடிக்கப்படும் நாய்கள் எல்லாம் இறச்சகுளம் ஊரினுடைய ஒதுக்குப்புறமான மலையடிவாரத்தில் யாரும் இல்லாத நேரம் கொண்டு விட்டு செல்கிறார்கள்.
அவைகள் தான் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்துள்ளது என்றும் இதனால் பகல், இரவு வேளைகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள் என்றும் இந்த நாய் கடியானது பகல் வேளை இல்லாமல் காலை மற்றும் மாலை நேரங்களாக இருந்தால் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் கூறினார். மேலும் மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



