புதுக்கடை, ஜன. 7 –
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஆனந்து (25). இவர் அரசு பஸ்ஸில் சி எல் ஆர் டிரைவராக தற்போது பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் கருங்கல் – புதுக்கடை சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். வேங்கோடு, பனவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று அனந்துவின் பைக் மீது மோதியது.
இதில் அனந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் ஸ்தேவான் ஐசக் என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


