நாகர்கோவில், டிச. 22 –
கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் நேதாஜி நகரை சேர்ந்த தற்கொலை செய்து கொண்ட மாணவி தீபிகாவின் தாயார் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் இன்று கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 பெண் குழந்தைகள் உண்டு. மூத்த மகள் தீபிகா கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து பொது இடத்தில் வைத்து ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியும், அடித்து காயப்படுத்தி தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். இதனால் எனது மகள் தீபிகா மனமுடைந்து கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தோம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குபதிவு செய்திருந்ததால் இது சம்பந்தமாக எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பிரிவுகள் மாற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை
இந்த வழக்கில் உள்ள சந்திரா, கவிதா, அனுஷா ஆகிய மூன்று பேரையும் சட்டப்படி கைது செய்து நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



