By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை
இராமநாதபுரம்மாவட்டம்

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை

Last updated: September 17, 2024 10:33 am
September 17, 2024
70 Views
Share
SHARE

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் 

 

 

 முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

 

 

ராமநாதபுரம், செப்.17-

 

எட்டு ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் நோயுடன் அவதிப்பட்டு உதவி செய்ய வழியின்றி தவித்த தமிழரை மீட்டு இந்தியா அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மற்றும் அதற்கு முழுவதுமாக உதவிய ஒற்றைத் தமிழருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

தமுமுக தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை ஜாதி மதம் கடந்து செய்து வருகிறது. தமுமுகவின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வழிகாட்டுதலில் தற்போது தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் தமுமுகவின் தன்னலமற்ற உதவிகள் பெருகி வருகிறது. அதற்கு ஒரு முக்கிய உதாரணமாக தற்போது வெளிநாட்டில் தவித்து வந்த கடலூர் கண்ணன் தமுமுகவின் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பின் மூலம் மீட்கப்பட்டு சொந்த மண்ணில் கால் பதித்த நெகிழ்வான நிகழ்ச்சி பலரையும் மனம் உருக செய்து உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார்.

ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார். அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து, சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு  வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தமுமுகவின் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில  தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன்  தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகம்மதுவிடம்  தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா,  துணை செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக கடலூர் கண்ணனுக்கு எக்ஸிட் அனுமதி பெற  சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்தனர். ஒரு வழியாக  சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமானம் மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம்  பயண துணையுடன் இந்தியாவிற்கு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாத்தில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும். 

மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் கடலூர் கண்ணன்.

 அதையும் ஏற்பாடு செய்து வாங்கி கொடுக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது.

கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய ஆர்டி தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவ ரீதியாக உதவிய டாக்டர் அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர் ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள். இதற்கு உதவிய அனைவருக்கும் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது , 

பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும்  இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம் 

என்றென்றும் மனிதநேய சேவையில் நாங்கள் உள்ளோம் என்று 

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*

சமூக நலத்துறை

மத்திய மண்டலம்

ரியாத் – சவுதி அரேபியா நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா
நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

May 30, 2024
159 Views
1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
மத்தூரில் உள்ள 72 வணிக கடைகளுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account