கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருப்பத்தூர்:மே:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மு க ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு ” என்னும் தலைப்பின் கீழ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் இக்கூட்டமானது நடைபெற்றது.
இந்நிலையில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் S.K.T.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கிளை கழக செயலாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஒன்றிய அவைத் தலைவர் துரைசாமி,
ஒன்றிய கழக துணை செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ராஜா,சம்பூர்ணம், மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன்,மனோகரன், சாம்ராஜ், ஒன்றிய பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
தலைமை கழக பேச்சாளர் ராஜசேகர் (எ) லயோலா ராஜசேகர் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.
எதிர்பாராத விதமாக கொட்டும் மழையிலும் தொடர்ந்து திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக விளக்கி பேசினார். மேலும் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமாரின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தன், நீலம்மாள் திருப்பதி, இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் சதீஷ்,அன்பரசு, அனுமுத்து, சையத் உசேன், ராஜேந்திரன் மதன், தகவல் தொழில்நுட்ப அணி சதிஷ்,ஜெகதீஷ் குமார், அறிவு செல்வி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், இளைஞரணியினர், கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.