நாகர்கோவில் ஜூலை 11
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் வசந்த் எம் பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம் எல் ஏ வருகிற 15ம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒழுகினசேரியில் வைத்து வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.