மதுரை மே 27
மதுரை அருள்மிகு கள்ளழகர்
திருக்கோயிலில்
பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது.
இது குறித்து
திருக்கோயில்,
துணை ஆணையர் / செயல் அலுவலர்
ந.யக்ஞநாராயணன்.
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அருள்மிகு கள்ளழகர்
திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா எதிர் வரும் மாதம் 02.06.2025 அன்று தொடங்கி 11.06.2025 அன்று வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முன்னதாக 02.06.2025 ஆம் தேதியன்று மாலை 07:15 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் தனுசு லக்கனத்தில் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. வசந்த உற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணியளவில் சுவாமி ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ஆடி வீதி வழியே உலா வந்து இராமர் சன்னதி வழியே பதினெட்டாம்படி சென்று பின்பு அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைவார். மேற்படி திருவிழா 10 நாட்கள் திருக்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும்.
என்று தெரிவித்துள்ளார்.



