கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் நர்சிங் கல்லூரியில், இதயம்,நுரையீரல் இயக்க
முதலுதவி பயிற்சி கல்லூரி முதல்வர் வி.கலா முன்னிலையில் நடைபெற்றது.
கலசலிங்கம் பல்கலை துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.பரமக்குடி,
முதலுதவி மாஸ்டர் பயிற்சியாளர்,
எஸ்.அலெக்ஸ் , இதயம்,நுரையீரல் இயக்கம் தடைபடுதல் , மின்சாரம் தாக்குதல், உட்பட்டவர்களை டி.ஆர்.ஏ.பி.சி.என்ற வரிசையில்,முதலுதவி சம இடைவெளியில், ஒரு சுற்று 20 தடவை, 5 சுற்று ,கைகளால் அழுத்தம் செய்து அபாயக் கட்டத்தை தாண்டும் பயிற்சிகளை செய்ய மாணவர்களும் செய்து பயிற்சி பெற்றனர்.
மேலும் நீரில் மூழ்கியவர்கட்கு, விஷக் கடி,பாம்புக்கடி,பலத்த காயம் ஏற்பட்டவர்களை, தூக்கி முதலுதவி செய்யும் முறைகளை பயிற்சியுடன் விவரித்தார்.மாணவர்கள் ,ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பேரரசிரியைகள் ஜி.தங்க சுப்புலட்சுமி,கே.நாகமுத்து
பயிற்சிக் கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஜெனிபர் பிரசில்லா வரவேற்புரையும், இராமலட்சுமி நன்றியுரையும் வழங்கினர்.


