கன்னியாகுமரி,செப்.13-
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகேயுள்ள கோட்டக்கரை லெட்சுமிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம்தேதி தொடங்கி வருகிற 15 ம் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் ,அபிஷேகங்கள் நடைபெற்றன.ஏழாம் நாள் விழாவான இன்று ஸ்ரீ சக்தி விநாயகர் வாலிபர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்ற அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தொடக்கி வைத்தார் .
இதில் கவுன்சிலர் பிரேம் ஆனந்த்,திமுக நிர்வாகிகள் பொன் ஜான்சன்,தமிழ்மாறன்,பால்ராஜ் அகஸ்தியலிங்கம் ,ஏ.பி.முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.