மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் கபாடி வீராங்கனைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தால் அளிக்கப்பட்ட சீருடைகளை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்கு உள்பட்டோர் என இரண்டு கபாடி அணிகள் உள்ளன. இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகள் மட்டுமின்றி மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவர்கள் கபாடி போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் சார்பில் 24 கபாடி வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத் தலைவர் ரஜினியால் அளிக்கப்பட்ட சீருடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவிகளுக்கு வழங்கி அருளாசி கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட அமெச்சூர் கபாடி கழக தலைவர் ரஜினி, பள்ளிச் செயலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.