நாகர்கோவில் ஏப். 22
நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுகிறது.
நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த நிர்மல் ராஜ் (65).இவர் பொதுப்பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களது மகன் மற்றும் மகள் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் இருவரும் மகனையும் மகளையும் பார்ப்பதற்காக சென்னை சென்று விட்டு நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 35 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.