தேனி மாவட்டம், ஜூலை – 18 தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முல்லைப் பெரியாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகின்றன இதனால் வீரபாண்டி ஆற்றின் தடுப்பணை தாண்டி நீர் செல்வதால் உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என காவல்துறையின் சார்பாக எச்சரிக்கப்பட்டது



