சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்கள் கனமழை யின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ராஜா எம்எல்ஏ தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி மழை பாதிப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் இலந்தைகுளம் மற்றும் கீழநீலிதநல்லூர் கிராமங்களில் கன மழை காரணமாக பாதிக்க பட்ட பகுதிகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளில் உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து இலந்தைகுளம் கிராமத்தில் உடைந்த குளத்தை பார்வையிட்டு அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுத்தார். மழையினால் வீடு இடிந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் மாவட்ட செயலாளர் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா.



