உலக பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பில் செர்பியா நாட்டில் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ISF World School U15 Gymnasiade 2025 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனையர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பயணம், விமானக்கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தலா ரூ.2.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.15 இலட்சம் அளவில் காசோலையை இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் உலகில் பல்வேறு திக்சைகள் செலுத்தி சாதனைகள் படைக்க, திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுக்கு துணை நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.