கன்னியாகுமரி அக் 28
குமரி மாவட்ட எல்லையான பாறசாலை அருகே யூடியூபர்களான தம்பதி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி கேரள எல்லையில் உள்ள பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). அவரது மனைவி பிரியா (40). அவர்களது மகன் எர்ணாகுளத்தில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். செல்வராஜும், பிரியாவும் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இதில் தங்களது வீட்டு நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புகள் உள்பட நிகழ்ச்சிகளை பகிர்ந்து வந்து உள்ளனர்.கடைசியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர். இந்தநிலையில் எர்ணாகுளத்தில் படிக்கும் அவர்களது மகன் இன்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பிரியா கட்டிலிலும், செல்வராஜ் தூக்கிலும் இறந்த நிலையில் காணப்பட்டனர். இதுகுறித்து பாறசாலை போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.