தேனி
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில், கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா நடந்தது .விழாவிற்கு கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார்.
விழாவில் கல்லூரிக்கு இடையேயான மாணவ மாணவிகளுக்கு குழு நடனம், பாட்டுப்போட்டி ,ஊமை நாடகம், தொழில் திறன் வினாடி வினா, கழிவிலிருந்து கலைப் பொருள்கள் செய்தல் ,புகைப்படம் ,திறன் மேம்பாடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் தேனி ,மதுரை ,திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 27 கல்லூரிகளில் இருந்து ,ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி குழுமத் தலைவர் மோகன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போடி ஏல விவசாய சங்க கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும் ,பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் வேல்ராஜன், கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உமா மகேஸ்வரி உட்பட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.