நோய் தொற்றும் நிலையில் மக்கள் தேனி மாவட்டம், ஜூலை – 5 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ ஆபிஸ் மேல் பகுதியான 13-வது வார்டில் 25-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காணப்படுகின்றன இப் பகுதியில் கழிவுநீர் சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது மேலும் துர்நாற்றம் வீசுகிறது பகலிலே கொசுக்களின் தொல்லை அதிகமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் புலம்பிய வண்ணம் உள்ளன அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் காய்ச்சல் வாந்தி அரிப்பு போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது எனவே பெருந்தோற்று ஏதும் ஏற்படும் முன்பு உத்தமபாளையம் பேரூராட்சி
மக்களின் நலன் கருதி சாக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்