தஞ்சாவூர். டிச 5.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார் .கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த 48 மாற்றுத்திறனாளிகளுக்கு சேஷம்பாடி கிராமத்தில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச்செல்வன், உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்