சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா,
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழாவில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி மருத்துவ மனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், பெருநகர சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் கே.கே.சி.பிரபாகர் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 140 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், TNPID நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.பாபு, அடையார் ஆனந்த பவன் குழும நிறுவனத்தின் பங்குதாரர் கே.டி.வெங்கடேச ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் மருத்துவர் கே.பி.கோசிகன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தார்.
ஜெயா தையல் எந்திர நிறுவனத்தின் எஸ்.பி.முத்தையா மற்றும் ஜெயலட்சுமி, ஜெயா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் எம்.பாலச்சந்தர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.