தஞ்சாவூர். செப்.25.
தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைட்டில் பூங்கா என்கிற தகவல் தொழில்நுட்ப பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பூங்காவை சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் இதையொட்டி தஞ்சாவூரில்மினி டைட்டில் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:
இந்தபூங்கா 3.40 ஏக்கர் பரப்பள வின் 55 ஆயிரம் சதுர அடியில் ரூபாய் 30.50 கோடி மதிப்பில் 4 அடுக்குகளில் கட்டப்பட்ட மினி டைட்டில் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்களில் ஏறத்தாழ 500 பேருக்கு மென்பொருள் வல்லுனர்களாகவும், ஏறத்தாழ 600 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்) சரவணன். (கும்பகோணம்) மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.