தஞ்சாவூர் பிப்.27.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா அமைச்சர் கோவி .செழியன் முதல் விற்பனை யை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது .இதையொட்டி திருவிடைமருதூரில் நடந்த விழா வில் அமைச்சர் கோவி .செழியன் குத்துவிளக்கு ஏற்றி, மருந்துகள் முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன் எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, எம்எல்ஏக்கள் அன்பழகன், துரை .சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், முன்னாள் எம்பி ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் தமிழ் நங்கை ,கும்பகோணம் மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன், தாசில்தார் பாக்கியராஜ், திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா ஜெயபால், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்