ராமநாதபுரம், பிப்.27-
ராமநாதபுரம் அருகே வாணி – கழுகூரணியில் ஏ வி கே ராஜா யாதவ் அறக்கட்டளை சார்பில் இறகு பந்து உள் அரங்கு திறப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபல கட்டட பொருள் வீனியோக தொழில் நிறுவனமான அவின்க்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் நினைவு தினத்தை முன்னிட்டு ஏ பி கே ராஜா யாதவ் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திட்ட உதவிகள் வழங்கி வர திட்டமிட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏ.வி.கே. அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தில் பிரம்மாண்டமான இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த விளையாட்டு உள் அரங்கு திறப்பு விழாவில்
முனஞமுதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் மலேசியா பாண்டி தலைமை வகித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
பட்டணம்காத்தான் முன்னாள் கவுன்சிலர் ஆர் ஜி மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். உள் அரங்கை கூடுதல் எஸ்பி பாலச்சந்திரன் அவின்கோ நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் பெற்றோர் ஏ.வி.காளிமுத்தன் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரவி தமிழ்வாணன், போகலூர் ஒன்றிய அதிமுக செயலாளர் லோகி தாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ஆரோக்யா மருத்துவமனை தலைமை மருத்துவர் பரணிகுமார், என்கேசி பில்டர்ஸ் பொறியாளர் சந்திரசுதன், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அவின் கோ நிர்வாக இயக்குநர் இளங்கோவன் அறக்கட்டளை துவக்க விழா மற்றும் விளையாட்டு உள் அரங்கு திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.