திண்டுக்கல் அய்யபாபட்டி (வழி) வேம்பார்பட்டியில் உள்ள லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழாவை திண்டுக்கல் மறை மாவட்ட மேதகு ஆயர் P .தாமஸ்பால்சாமி DD கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை புனிதப்படுத்தி
திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மைகுரு பேரருட்பணி
T.சகாயராஜ், கொசவபட்டி மறை மாவட்ட அதிபர் பேரருட்பணி அகஸ்டின் ஜேக்கப், வேம்பார்பட்டி பங்குத்தந்தை அருட்பணி நிர்மல் சூசைராஜ் JH, மற்றும் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சேவ் அறக்கட்டளையின் நிறுவனர் A.அலோசியஸ், நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் அஇஅதிமுக
R.V.N.கண்ணன், வேம்பார்பட்டி தொழிலதிபர் PMSK. அபுதாகிர், வேம்பார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் P.கந்தசாமி , வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் M.மார்ட்டின் கென்னடி, வேம்பார்பட்டி தூய அன்னாள் அருட்சகோதரிகள், ஊர்முக்கியஸ்தர்கள், பெரியவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முதியோர்கள்,
பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திண்டுக்கல் DMSSS இயக்குனர்
அருட்பணி S.ஜான்நெப்போலியன் மற்றும் DMSSS பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



