திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு அருகே உள்ள கல்லுப்பட்டி குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பொறுப்பாளர்களாக இ.பிரிஜுவல் பிரின்ஸ் தலைவராகவும் டே.சாமுவேல் ராஜ் செயலாளராகவும், அ.அந்தோணி பொருளாலராகவும் பதவியினை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன் பின்னர் பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.