அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
திண்டுக்கல், தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் 5 நாட்கள் நடைபெற்ற அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
திங்கள் கிழமை பயிற்சி முகாம் தொடக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் .மேரி பிரமிளா சாந்தி தலைமை உரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) நாகேந்திரன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் . கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி மற்றும் திருச்சி செயின்ட். ஜோசப் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர். அலெக்சாண்டர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர். சபரி கிரிசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில் தரமான தலைமைத்துவம் வாய்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குவதுடன் சிறந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி செயல்பாடுகளில் மாணவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார். மாவட்ட அளவில் வருகை தந்த பல்வேறு பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்கள் இப் பயிற்சியின் நிறைவு குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கிருத்திகா நன்றி உரை வழங்கினார். கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர். சிவரஞ்சனி பயிற்சி முகாமினை ஒருங்கிணைத்தார்.