நாகர்கோவில் – அக்- 04,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியரிடம் மணவாளக்குறிச்சியில் 1144 ஹெக்டேரில் தாது மணல் எடுப்பதற்க்கு அனுமதி வழங்குவதற்க்கு பொதுமக்கள் கருத்துக் கேட்ப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஐ.என். டி.யு.சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் பொன் ராஜா தலைமையில் மறு அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டத்தின் பெருமைக்குரிய மத்திய பொதுத்துறை நிறுவனமாகவும் மத்திய மாநில அரசுகளுக்கு கணிசமான அளவில் வருவாய் ஈட்டி கொடுக்கும் நிறுவனமாகவும் ஐ ஆர் இ எல் இந்திய நிறுவனம் 1950 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டது இங்கு 1965 முதல் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடங்குவதற்கு முன் இப்பகுதியில் கனிமப் பிரிப்பு ஆலை 1910 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . அதாவது சுமார் 114 வருடங்களாக இப்பகுதியில் இந்த கனிமம் பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்று வருகிறது இந் நிறுவனத்தில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சுமார் 2000 – க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் மத்திய மாநில அரசினால் ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டு சுற்றுச்சூழல் அனுமதியின் படி 148 ஹெக்டேர் இடங்களில் மணலை அகழ்வு செய்து எடுத்து வந்து அதிலிருந்து அரிய வகை கனிமங்களான இல்மனைட் , ரூட் டைல், மோனோசைட் , சிர்கான்,
மற்றும் கார்னைட், காகவத்தை பிரித்து எடுக்கிறார்கள். கனிமங்கள் நமது மாவட்டத்தில் கடலோரம் மற்றும் உள் நிலப்பகுதிகளில் இயற்கையாகவே அதிக கதிர்வீச்சு தன்மையுடன் காணப்படுகிறது இப்பகுதியில் இயற்கையாக உள்ள கதிர்வீச்சு நிறுவனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை மாறாக இன் நிறுவனம் அதிக கதிர் இயக்கம் உள்ள பகுதிகளில் இருந்து கனிம மண்ணை அகழ்வு செய்து எடுத்து வந்து ஐ.ஆர். இ.எல் ஆலையில் அதில் அடங்கியுள்ள கனிமங்களின் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் மின்கடத்து திறன், காந்த நிலைத் தன்மை மற்றும் ஈர்ப்புத் தன்மை அடிப்படையில் பிரித்து எடுத்து சுத்தமான மணலை மனல் எடுத்த நிலப்பகுதியில் இட்டு நிரப்பி விடுகிறார்கள்.
இந் நிறுவனம் நிலத்தை கையகப்படுத்துவதில்லை நில உரிமையாளரின் சம்மதத்துடன் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டு மனலை எடுத்து அதிலிருக்கும் அரியவகை கனிமங்களை அதன் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் பிரித்து எடுக்கிறார்கள். பின்னர் கனிமம் நீக்கப்பட்ட மன்னை அதே இடத்தில் மீண்டும் நிரப்பி விடுவதால் அப்பகுதியில் இயற்க்கையாகவே உள்ள கதிரியக்க அளவு 8 முதல் 10 மடங்கு வரை குறைக்க படுகிறது. நில உரிமையாளருக்கும் தமிழக அரசின் நில வழிகாட்டி மதிப்பில் 80% தொகையை குத்தகை தொகையாக கொடுப்பதுடன் . அந்த இடத்தில் இருக்கும் தென்னை மரத்திற்க்கு தோட்டக்கலைத்துறை கணக்கிட்டு கொடுக்கும் இழப்புத் தொகையையும் குத்தகை தொகையாக வழங்கி வருகிறார்கள். இவ்வனைத்து நிறுவனங்கின் உற்த்தி ஐ.ஆர்.இ. எல் வழங்கும் மூலப்பொருளை சார்ந்து உள்ளது.மற்ற கனிமங்களை எடுக்கும் முறையானது மற்ற கனிமங்களை எடுக்கும் முறையான துளையிட்டு அதன் பின் வெடிமருந்து மூலம் வெடிக்க செய்து எடுப்பது போல் அல்லாமல் மிக எளிய முறையில் இயந்திரங்களை மட்டும் உபயோகப்படுத்தி எடுப்பதினால் சுற்றுச்சூழலுக்கு சுற்றுப்புற பகுதிகளுக்கோ எப்பொழுதும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை ஐ ஆர் இ எல் ஆலையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் பிரிவு நிறுவப்பட்டு இதன் செயல்பாட்டை நேரடியாக கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டின் மிக முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் இந்நிறுவனம் நம் நாட்டிற்கும் மக்களுக்கும் மிக முக்கிய தேவையானதாகும் இதற்கு எதிர்மறையான தவறான கருத்துக்களை உள் நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் தேச நலன் வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி மற்றும் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி அடைய இந்நிறுவனம் கூறியுள்ள 1144 ஹெட் நிலப்பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை உடனே நடத்திட நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் செயல் தலைவர் வஞ்சு மார்த்தாண்டன்,சட்ட ஆலோசகர் ஜான் சௌந்தர், துணைத்தலைவர் எத்திராஜ் , பொதுச்செயலாளர் காந்தி குமார், பொருளாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர்கள் வெங்கடேஷ், பாலிகர், மணிகண்டன், அருள், ராஜசேகர், ஜலால் பட்சிங், சுந்தரலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் ராஜகுமார், நீல ராஜகுமார், உதயகுமார், வில்சன் லியோ, நெல்சன், மற்றும் ஐ.என்.டி.யு.சி. தங்கதுரை, சாந்தகுமாரன், மாநகர தலைவர் மகாலிங்கம் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.