மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி கிராம் உள்ளது.
இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சோளங்குருணி கண்மாயில் நிலையூர் – கம்பிக்குடி கால்வாய் மூலம் கம்பிக்குடி செல்வதற்காக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
இதில் சோலங்குருணி கண்மாய் முழுவதும் நிறைந்த நிலையில் கிழக்குப் பக்கம் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவிற்கு நீர் புகுந்தது.
இதனால்
60 ஏக்கர் பரப்பளவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்திரி, வெண்டை , கடலை மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர்.
விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் கத்திரிக்காய் வெண்டை மற்றும் மல்லிகை பூ செடி கடலை செடி ஆகியவை நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவானது.
மேலும்
கடந்த நான்கு வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் சோளங்குருணி கண்மாயில் கிழக்கு பக்கம் வடிகால் கால்வாய் இல்லாததால் நீர்கள் விவசாய நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது இது குறித்து மாவட்ட ஆட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு இடங்களில் இந்த பகுதி மக்கள் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிழக்கு பக்கம் கண்மாயில் மருகால் பாய்வதற்கான வடிகால் கால்வாய் அமைக்கவும் அல்லது தங்கள் விளைநிலங்களில் தண்ணீர் வரமால் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்
வலியுறுத்தி
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.