நாகர்கோவில் – மார்ச் – 21,
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டதில் விவசாய பயன் பாட்டிற்க்கும் , மண்பாண்ட தொழிலிலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள குளங்களில் இருந்து விவசாயிகள் அரசின் முறையான வழிகாட்டு விதிமுறைகளை பயன்படுத்தி அனுமதி பெற்று குளங்களில் இருந்து வண்டல்மன் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது.
ஆனால் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சில குளங்களில் இரவு பகலாக மண்களை அள்ளி செங்கல் சூளை பணிகளுக்கும், அஸ்திவாரம் அமைப்பதற்கும் , வீட்டுமனை விற்ப்பனையாளர்களின் இடங்களை நிரப்புவதற்க்கு என்று தினமும் பல ஆயிரம் யூனிட் மண் கடத்தப்பட்டு அரசின் கொள்கையை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் குளங்களில் உள்ளூர் அரசியல் வாதிகளின் தலையீட்டால் சில விவசாயிகள் அரசியல்வாதிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் பாதியில் மண் அள்ளும் பணியினை விட்டு , விட்டு, சென்று விடுகின்றனர்.
இது குறித்து சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் அந்தோணி முத்து தெரிவிக்கையில் :-
விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து வரும் நிலையில் அதனுடைய தன்மையை அதிகரிக்கும் பொருட்டு வண்டல் மண் எடுத்து நிலங்களில் இட்டு பயிர் செய்யும் போது நல்ல மகசூல் பெற முடியும் எனவேதான் அரசு குளங்களில் இருந்து விவசாயிகள் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது.
இது ஒரு நுண்துளை மண் மற்றும் விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமானது. இந்த மண்ணில் விளையும் பொதுவான பயிர்கள் ஏராளம்
இதில் பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு , மற்றும் கார்பன் கலவைகள், அதிகமாக காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.
வண்டல் மண் மண்டி களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது.
வேளாண்மைக்கு அவசியம் தேவைப்படுவது நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவை. நிலம் என்பது ஒரு பகுதியில் அமைந்துள்ள மண்தான். மண்ணில் பல வகை உண்டு. செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த குறு மண், சரளை மண், களி மண், களி கலந்த குறு மண் ஆகியவை அவற்றின் இயற்பியல் தன்மையை அல்லது வெளிப்புறத் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கிறோம்.
செம்மண்ணை எடுத்துக்கொண்டால் இம்மண்ணில் ஆண்டுப் பயிர்களான நிலக்கடலை, வாழை போன்றவையும், கொய்யா, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டுப் பயிர்களும் நன்கு வளரும். செம்மண் நிலம் நல்ல குணநலன்களைக் கொண்ட செழிப்பான மண். எந்த ஒரு மண் வகையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு அதிகமாகி அங்கத்தன்மை (கரிமத்தன்மை) 3% சதவீதம் வரை இருந்தால் அந்த மண் வளமான மண்.
மண் வளத்தைப் பேனாமல் உரங்களைத் தேவைக்கு அதிகமாக இடுவது, குறைந்தது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நிலத்தை ஆழமாக உழாமல் இருப்பதால் கடினப் பாறை உண்டாவது, நிலச்சரிவு, அதிக மழையின் காரணமாக மேல் மண் அடித்துச் செல்லப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்ககத்தன்மை அல்லது கரிம வளம் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய மண்ணில் சராசரியாக 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையே அங்கத்தன்மையே இருக்கிறது.என்றாலும், அதிக அளவு இயற்கை உரங்களை நிலத்துக்கு இடுதல், நிலத்தை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை சட்டிக்கலப்பைக் கொண்டு ஆழமாக உழுதல், புஞ்சை நிலங்களில் ஆட்டுக் கொட்டகைகள் அமைத்தல், நஞ்சை நிலங்களில் தழை உரங்களை வளர்த்துப் பின்னர் அவற்றை மடக்கி உழுதல், மண்புழு உரம், பயிர்கள் கழிவு, கோழி எரு, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவை மண் வளத்தையும் கரிமத்தன்மையும் கூட்டும். இதனால் விவசாயிகள் எந்தப் பயிர் செய்தாலும் அதில் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவேதான் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அரசு ஊக்குவிக்கிறது.
ஆனால் நமது மாவட்டத்தில் விவசாயிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.
ஒரு விவசாயிக்கு அரசு ஒரு குளத்திலிருந்து மண் எடுக்க குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்து எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது. ஆனால் அரசியல் வாதிகளின் தலையீட்டினாலும், அரசு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உதவியுடன் விவசாயி அல்லாத வேறு நபர்கள் மண் விற்பனைக்காக இரவு பகல் பாராமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் குளங்களை அளவுக்கு அதிகமாக ஆழப்படுத்தி வண்டல் மண் எடுத்து செங்கல் சூளையிலும், தென்னந்தோப்புகளிலும், தனியர் நிலத்திலும் மலைபோல் குவித்து வைத்து விட்டு மண் தட்டுபாடு நிலவும் போது அதிக விற்பனைக்கு பதுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதனால் நீர் நிலைகளில் உள்ள நிலத்தடி நீர் குறைவதுடன் அப்பகுதியில் உள்ள வளங்களும் முற்றிலும் மாறிவிடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்து விவசாயி அல்லாத நபர்களால் மண் எடுக்கப்பட்ட குளங்களை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து இருந்தால் அவர்கள் மீதும் சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என சிபிஐ எம் எல் கன்னியாகுமரி மாவட்ட யலாளர் எஸ்.எம் அந்தோணி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



