மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் உள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறை இன்றி சாலையோர வியாபாரம் நடைபெறுவதை தவிர்க்கவும் அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டாம் கட்டமாக சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட சாலையோர வயாபாரிகளுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டைகளை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.