By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான் முதல்வன் உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நான் முதல்வன் உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை
அரியலூர்மாவட்டம்

நான் முதல்வன் உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை

Last updated: September 13, 2024 11:25 am
September 13, 2024
55 Views
Share
SHARE

அரியலூர்,செப்:13

 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்தார்.

 

இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைகான ஆணையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:

 

நான் முதல்வன் உயர்வுக்குப் படி திட்டமானது தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் உன்னதமான ஒரு திட்டமாகும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொருளாதார சூழலின் காரணமாகவோ, குடும்ப சூழல் காரணமாகவோ உயர்கல்வி சேராத மாணவர்களை கண்டறிந்து அச்சூழலை நீக்கி அவர்களை உயர்கல்வியில் சேர வைக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அவர்களையும் உயர்கல்வியில் சேர வைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். மேலும், மாணவர்களின் விருப்பதிற்கேற்ப திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

 

இம்முகாமில் கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர முடியாமல் ஏற்பட்டுள்ள தடைகள் தற்காலிகமானது. அத்தடைகளை தகர்த்து மாணவர்கள் உயர்கல்வி பயிலவேண்டும். கல்வியே சிறந்த முன்னேற்றத்திற்கான வழியாகும். பெற்றோர்கள் பொருளாதார சூழ்நிலையின் காரணங்களுக்காக மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்காமல் இருக்கக்கூடாது. இம்முகாமில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலியிட விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் மூலம் சான்றிதழ்கள் தேவை இருப்பின் அதனை உடனடியாக வழங்கிட ஏதுவாக இ-சேவை மையங்களும் அமைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி கடனுதவிகள் வழங்கிடும் பொருட்டு பல்வேறு வங்கிகளும் வருகை புரிந்துள்ளனர். கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப சேர்க்கை நடைபெறவுள்ளது.

 

எவ்வித சூழ்நிலை காரணங்களுக்காகவும் கல்வி கற்பதில் தடை ஏற்படகூடாது என தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய சிறப்பான திட்டங்களை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கி படிப்பதற்கான விடுதி வசதிகளும் வழங்கப்படுகிறது. 

 

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர்கல்வி சேர்கை, கல்விக் கடனுதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதுகுறித்த தகவல்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இவைகளை கடைபிடித்து உயர்கல்வி பயில வேண்டும். எனவே, மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து கல்வி பயின்று, வாழ்கையில் நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பேசினார். 

 

தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு தகவல் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யுமிடம், சான்றிதழ்கள் வழங்குவதற்கான இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.

 

மேலும், இம்முகாமில் உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளைச் சேர்ந்த 247 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 66 மாணவ, மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி சேர்க்கைகாக விண்ணப்பித்துள்ளனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
நோய் தொற்றும் நிலையில் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

June 21, 2025
32 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி முதியவர் பலி
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
அணைக்கட்டு தாலுகாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account