சுசீந்திரம்.மே.3
மது பழக்கத்தால் கணவர் மனைவியிடையே தகராரு கணவர் தூக்கிட்டு தற்கொலை
சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமம் பகுதியில் வசித்து வருபவர் பாலு 27 இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளன இவர் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கம் உடையவர் என தெரிகிறது இதனால் சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பாலு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இந்நிலையில் தேரூர் பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் தனது வேஷ்டியால் தூக்கு போட்டு கிடந்து உள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது தந்தை ராஜு மற்றும் அருகே உள்ளவர்கள்அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர் பின்பு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசார்புள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர் இது குறித்து பாலு தந்தை ராஜு சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்