கிருஷ்ணகிரி, மே, 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனபள்ளி ஒன்றியம், சின்னமனவாரணப்பள்ளி கிராமத்தில், 25 ஆண்டுகளாக போராடி வந்த மக்களுக்கு கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராடி இலவச வீட்டுமனையை பெற்றுதந்தனர். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ஆணை வழங்கபட்டு, வீடு கட்டும் பணிகள் தொடங்க இருந்த நிலையில்,வட்டார வளர்சி அலுவலர் மகேஷ்குமரன், பயனாளிகளிடம் இது போலி பட்டா என புகார் வந்திருப்பதாகவும், விசாரணை முடியும் வரை வீடு கட்டும் பணியை நிறுத்துங்கள் என சொல்லியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து,மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் கவனத்திற்கு கொண்டு சென்றனர், இதைத்தொடர்ந்து விசிக மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் நேரடியாக மக்களுடன் சென்று வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக பதில் தெரிவிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. உடனிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே உள்ளிருப்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு DSP முரளி தலைமையில், வேப்பனப்பள்ளி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வீடு கட்ட எந்த தொந்தரவும் செய்யப்பட மாட்டாது என தெரிவித்ததன் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளிருப்பு முற்றுகை போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டது. சட்டமன்ற குழு வருகை புரியும் இந்த நேரத்தில், அரசு அலுவலகம் முற்றுகை உள்ளிருப்பு போராட்டமானது வேப்பனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், வேப்பனப்பள்ளி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ், சின்னமனவாரணபள்ளி ஒன்றிய பொறுப்பாளர் ஆட்டோசுரேஷ், மற்றும் ராஜ்குமார், வெங்கடேஷ், கிங்காங், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்



