நிலக்கோட்டையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் காவல்துறையினரின் உதவியுடன் குண்டுக்கட்டாக கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு
நிலக்கோட்டை செப்.24
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையில் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பில் இருந்த ஹோட்டலை அகற்ற வந்த அதிகாரிகளுடன் கடை உரிமையாளர் கடும் வாக்குவாதில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த
காவல்துறையினரின் உதவியுடன் அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளரை கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து காவல்துறையினர். வருவாய்துறையினர் முன்னிலையில் பொருட்கள் எடுக்கப்பட்டு கடையை இடித்து தரைமட்டமாக்கினர் இச்சம்பவம் அப்பகுதியில் சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



