கோவை ஜூன்: 30
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள கேசவ் வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் கொடைக்கானலில் வழங்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகால கல்வி சேவையை பாராட்டியும், நூற்றுக்கணக்கான மாணவர்களை மேற்படிப்புகளுக்கு வழிநடத்தி இன்று மருத்துவர்களாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும், அரசு பணியாளர்களாகவும் மாற்றிய சேவைக்காக மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் பாண்டியராஜன் அவர்கள் தலைமை வகித்தார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் சோலைமலை அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் திண்டுக்கல் அப்துல் கலாம் அறக்கட்டளை மறுதை கலாம் மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் அபு. இக்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.