கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம். கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி பிப் 4:
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு சிலைக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் எஸ்.கே.நவாப், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டினத்திலும் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் ஜே.கே.எஸ் சாஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜன் ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு, ஒன்றிய துணை செயலாளர் தமிழரசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாரி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பிவிஎஸ் மணிகண்டன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.