தஞ்சாவூர். ஏப்.15.
உயர்கல்வி மருத்துவத்துறையில், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வளர்ச்சியில் ,தமிழகம் முதன்மை யாக திகழ்கிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் கூட்டரங்கில்
கல்லூரி 65-ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுமதி வரவேற்புரை யாற்றினார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் கலந்து கொண்டு 840 இளநிலை, 356 முதுநிலை, 03 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களு க்கும் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்ற இளநிலையில் 11, முதுநிலையில் 12 மாணவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி, பாராட்டி பேருரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசியதாவது,
நேற்று வரை மாணவர்களாகிய நீங்கள் இன்று முதல் பட்டதாரிகள். இந்த நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகத் திகழ்கின்றது. பிறந்த நாளை விட பட்டம் பெறும் நாள் மிகவும் சிறப்பானது.
முயற்சி, உழைப்பு, தேடல் மற்றும் ஆர்வம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வறுமை தடையாக இருக்க முடியாது.
தமிழக அரசின் புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டங்கள் மூலம் உயர் கல்வியில் மற்ற மாநிலங்க ளுடன் ஒப்பிடுகையில், அகில இந்திய அளவில் நமது மாநிலம் உயர் கல்வியில், மருத்துவத் துறை யில், சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் மற்றும் வளர்ச்சியில் முதன்மை யாக திகழ்கின்றது.
அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் வழியில் நமது மாநிலத் தை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தலைவர் ஸ்டாலின் அவர்களெல் லாம் முதல்வராக ஆண்டு வருவதா ல் மட்டுமே இவைகளெல்லாம் சாத்தியமாகின்றது என பேசினார்.
தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் து. ரோசி. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாத ன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி துறைத்தலைவர் கள், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக்குழு மற்றும் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர் கள் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்
உயர் கல்விதமிழகம் முதன்மையாகத் திகழ்கின்றது.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics