ராமநாதபுரம், ஜன.26-
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலை குழு கூட்டம்
தனியார் மஹாலில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்ட அளவில் தனியார் பள்ளி தாளாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலை குழு கூட்டம் தமிழகம் முழுவதும் பள்ளி தாளாளர்கள் அடங்கிய மாபெரும் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடை பெற்று வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
மாவட்ட தலைவர் M.S.வாசன் தலைமையில் வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லதுரை அப்துல்லா வரவேற்புரையாற்றினார்,
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற
மாநில துனை தலைவர் இன்ஸ்டின், மாநில துனைத்தலைவர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, மண்டல துணை செயலாளர் சண்முகம் ஆகியோர் சங்கம் இதுவரை எடுத்து கொண்ட முயற்சி சங்கம் வளர்ச்சி சங்கம் உறுப்பினர்கள் நலன் காக்க எடுக்க பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் ஆக பேசினர்.
மேலும் கூட்டத்தில்
பள்ளி தாளாளர்கள் கோரிக்கைகளான நிரந்தர அங்கீகாரம், ஏற்கனவே கட்டப்பட்ட நம் பள்ளி கட்டிடத்திற்கு DTCP ஆணை பெறுவது. மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை நடுநிலை பள்ளிகளை தரம் உயர்த்துவது தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற கோருதல், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் வேறு பள்ளிக்கு செல்லும் பட்சத்தில் ஏற்கனவே படித்து கொண்டிருந்த பள்ளியில் பாக்கி இல்லாமல் கட்டணத்தை செலுத்திவிட்டார்களா என்பதை உறுதி செய்ய கல்வித்துறை சிறந்த முடிவை எடுக்க வலியுறுத்தியது, பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விடுமுறை நாட்களில் கல்வித்துறையின் இடையூறின்றி சிறப்பு வகுப்புகள் நடத்துவது போன்று பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று மேற்குறிப்பிட்ட ஆறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதற்கு சங்கம் எடுத்துவரும் முயற்சிகளை விளக்கமாக நிர்வாகிகள் எடுத்து கூறி பேசினர். தாளாளர்களுக்கு உள்ள மற்ற பள்ளி சார்ந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது ஏதேனும் சில சட்ட ரீதியான பிரச்சினை வரும் போது சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு சென்று சம்மந்தப்பட்ட உறுப்பினர் பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து விரிவாக பேசினர். சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் மலேசியா பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
பொருளாளர்
ஜெயகுமார் நன்றி கூறினார்.
இராமநாதபுரம் மதுரை மெயின் ரோடு EMA ஹாலில் நடைபெற்றது.
ஆகியோர் கலந்து கொண்டனர்.