தஞ்சாவூர்.ஏப்ரல் 4.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் N Nபல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள இராராமுத்திரை கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 51.42 லட்சம் மதிப்பிலும் ரூபாய் 49. 58 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வடக்கு தெரு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியினை யும்,நியாய விலை கடையில் பொருள்கள் இருப்பு எடை தரம் குறித்து கடையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இ சேவை மையம் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார், குமிழக்குடியில் ஊராட்சி வளர்ச்சி துறையின் மூலம் ஊரக வீடுகள் சீரமைத்தல், திட்டத்தின் பல்வேறு வீடுகளும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அப்போது சம்பந்தப்பட்ட துறைஅலுவலர்களுக்கு நடை பெற்று வரும் அனைத்து பணி களும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியை தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்
ஆய்வின்போது பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், நவ ரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



