கிருஷ்ணகிரி மாவட்டம், ஏப் 23
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ள கும்மளாபுரம் சோதனை சாவடியில் கடந்த 21.10.2015-ம் தேதி அதிகாலை 0200 மணியளவில் தலைமை காவலர் 812 .மாரியப்பன் என்பவர் பணியில் இருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 1) சீனிவாசன் (37) S/o கோபால், செட்டிப்பள்ளி கிராமம், தேன்கனிக்கோட்டை 2) உமேஷ்குமார் (36) S/o லட்சுமணன், (Died) ஜெயந்தி காலனி, தளி மற்றும் 3) மது (33) S/o நாகராஜ், ஆனேக்கல், பெங்களுர் ஆகியோர் குடிபோதையில் பணியில் இருந்த தலைமை காவலர் 812 .மாரியப்பன் என்பவரிடம் தகராறு செய்து தாக்கியது சம்மந்தமாக தளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அப்போதைய காவல் ஆய்வாளர் .சரவணன் (தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், கள்ளகுறிச்சி மாவட்டம்) என்பவரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கானது தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று 21.04.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரிகள் 1) சீனிவாசன் 2) மது ஆகியோர்களுககு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 30,000/-அபராதமும் விதித்து அதில் ரூபாய் 25,000/- த்தை பாதிக்கப்பட்ட காவலருக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரிகள் இருவரும் வேலூர் மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.