கோவை டிச:08
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி காசநோய் கண்டறியும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் நியூ டவுன் தலைவர் துரைமுருகன், செயலாளர் திருநாவுக்கரசு, மற்றும் உறுப்பினர் சுரேஷ்குமார், நாகராஜ், பாலச்சந்திரன், வடிவேலன், மைக்கேல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100 நாட்கள் தொடர்ச்சியாக காசநோயை கண்டறியும் (Nikshay Vahan) வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருகின்றது. இந்த வாகனம் டிசம்பர் மாதம் 07-ம் தேதி முதல் மார்ச் மாதம் 17-ம் தேதி வரையிலும் கோவை மாவட்டம் முழுவதும் செயல்படஉள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகப்படியான காசநோய் பாதிக்கப்படக்கூடிய நகர (ம) கிராம பகுதிகளுக்கும் மற்றும் பின்தங்கிய பிறபகுதிகளுக்கும் இந்த வாகனம் நேரடியாகச் சென்று அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் காசநோயை முறையான பரிசோதனை மூலம் கண்டறிய செயல்பட உள்ளது.
ரோட்டரி New town மறுமலர்ச்சி என்ற திட்டத்தின் மூலமாக காச நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாதம் இருமுறை துணை ஊட்டச்சத்து உணவு வழங்குகிறது.