தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் ஈதுல் அழ்ஹா தொழுகை பள்ளிவாசலுக்கு சொந்தமான ஈத்கா திடலில் நடைபெற்றது. தாதன்குளம் முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முபீஸுர் ரஹ்மான் தலைமையில் தாதன்குளம் பள்ளிவாசல் இமாம் முகமது மீரான் அல்தாஃபி தொழுகை நடத்தி பெருநாள் குத்பா உரையாற்றினார் . இந்த சிறப்பு தொழுகையில் ஜமாத் செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் ஜமாத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் என திரளானோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.



