தூத்துக்குடி மாவட்ட கயத்தாறு யூனியனைச் சேர்ந்த தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து மாரியம்மன் கோயில் முன்பு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அவர்கள் நிதியியல் இருந்து ரூபாய் 3லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் புதிய போர் போட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.இதனை ப்ரியாகுருராஜ் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள் பால்ராஜ், சுரேஷ், மற்றும் ஊர் நாட்டாமைகள், முக்கிய நிர்வாகிகள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



