கிருஷ்ணகிரி- ஜூலை-06-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். கே. எம். சரயு. தலைமையில்நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 270 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில், இராணுவத்தில் அவில்தாராக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், பாலேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த .ராஜேந்திரன் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்ததையடுத்து, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் இராணுவ சம்பள கணக்கு (Salary Account) வைத்ததற்காக ரக்ஷா பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை அவருடைய மனைவி .ஜோதி அவர்களிடம் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28,349 மதிப்பில் திறன்பேசி மற்றும் வாசிக்கும் கருவி ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, 2023-2024 கல்வியாண்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல்
போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற பெரியபனமுட்லு ஏஇஎஸ் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்ற மாணவி மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.மேலும், மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் முன்னாள் இராணுவ வீரர் .ஜி.சண்முகம் அவர்கள், கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஓய்வூதிய தொகையான ரூ.30,161 -க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அலுவலக பயன்பாட்டிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள 7 வாகனங்களுக்கான சாவிகளை வாகன ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம் .பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .சீ.பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் .எஸ்.சுந்தராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊரக வளர்ச்சி .ராமஜெயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் .மகாதேவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் .சரவணன், பஞ்சாப் நேஷ்னல் வங்கி முதுநிலை மேலாளர் .கோ.களஞ்சிய ராஜா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி அலுவலர் .சந்தோஷ், உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.