மானாமதுரை:பிப்:18
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெரியதம்பிளிக்கான் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மானாமதுரை வட்டம் சூரக்குளம் பஞ்சாயத்து பெரியதம்பிளிக்கான் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா குரோத வெகு சிறப்பாக நடைபெற்றது.
சகோவிலின் மேல் அமைந்திருக்கும் கும்ப கவசத்தில் மந்திரங்கள் முழங்க கும்பத்தில் நீராடினர் அதன் பிறகு அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் கோவில் அருகே அமைந்துள்ள ஆலமரம் வேப்பமரம் இணைந்தது அதில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் தெய்வத்திற்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவில் பெரியதம்பிளிக்கான் கிராம பொதுமக்கள், மானாமதுரை, சூரக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.