குள்ளம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
கிருஷ்ணகிரி,நவ.24- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், குள்ளம்பட்டி ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றிய அலுவலக பற்றாளர் வசந்தராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சி செயலாளர் சி.பரசுராமன் நன்றி கூறினார்.